செய்திகள் :

"கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு; ஆனால்..."-காமெடியன் குணால் கம்ரா குறித்து ஏக்நாத் ஷிண்டே

post image

மகராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, தனது நிகழ்ச்சி ஒன்றில் ‘தில் தோஹ் பகல் ஹைய்’ என்ற இந்திப் படத்தின் பிரபலமான பாடலைப் பாடி, மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேரடியாக குறிப்பிடாமல் துரோகி என மறைமுகமாக பகடி செய்திருந்தார். மேலும் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிளவுகளையும் கேலி செய்திருந்தார். குணாலின் இந்த அரசியல் நையாண்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருகிறது.

குணால் கம்ராவின் அரசியல் நையாண்டி பேச்சால் ஆத்திரமடைந்த சிவசேனா ஆதரவாளர்கள், அவர் காமெடி நிகழ்ச்சி நடத்திய ஸ்டுடியோவை (க்ளப்) அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து குணால், "உங்களால் ஒரு நகைச்சுவையை உள்வாங்க முடியவில்லை. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்குமான உரிமை. நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை." என்று பதிலளித்திருந்தார். இது சர்ச்சைகளை இன்னும் கிளரிவிட்டிருந்தது.

தற்போது ஏக்நாத் ஷிண்டே இந்த விவகாரம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், "கருத்துச் சுதந்திரமனாது எல்லோருக்கும் உண்டு. ஆனால், சிலர் அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

அந்த நபர் என்னை மட்டுமல்ல பிரதமர் உட்பட நாட்டின் மதிப்பு மிக்கத் தலைவர்களை காமெடி என்ற பெயரில் உள்நோக்கத்துடன் விமர்சித்திருக்கிறார். அதற்காக வன்முறை, அடித்து உடைத்து பொருட்சேதங்களை ஏற்படுத்துவதை நான் ஆதரிக்கவில்லை. அவருக்குப் பின்னால் ஏதோ அரசியல் பின்புலம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

அமித் ஷா vs கனிமொழி: தமிழ் அகதிகள் பற்றி திமுக பேசவில்லையா? - வீடியோவுடன் பதிலளித்த கனிமொழி!

நாடாளுமன்றத்தில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025-ன் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த மசோதவின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்து பேசிய அமித் ஷா, அகதிகளுக்கென்று தனி சட்டம் தேவையில்லை... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மம்தாவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவர்கள்! - என்ன நடந்தது?

லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் (Kellogg College) உரையாற்றியிருக்கிறார். அப்போது, லண்டனில் உள்ள இந்... மேலும் பார்க்க

TVK : தவெக தலைவர் விஜய்க்கு பெற்றோரின் வாழ்த்து - முதல் பொதுக்குழு கூட்டம் | Photo Album

தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய் மேலும் பார்க்க

தவெக விஜய்: "2026-ல் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்; ஆனால்..." - கொந்தளித்த ஆனந்த்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முதல் பொதுக்குழுக் கூட்டத்தைத் திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திவருகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், பொதுச... மேலும் பார்க்க

Vijay : `மோடி ஜி, ஏன் அலர்ஜி?; மன்னராட்சி முதல்வர் அவர்களே... உங்க பெயர் சொல்ல பயமா?" - விஜய் ஸ்பீச்

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு கடந்திருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் அந்தக் கட... மேலும் பார்க்க