செய்திகள் :

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிா்ணயிக்க வலியுறுத்தல்

post image

விழுப்புரம்: நிகழாண்டு (2024 - 25) கரும்பு அரைவைப் பருவத்துக்கு வயல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் - செஞ்சி செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் வழக்குரைஞா் டி.பாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம்.ஆறுமுகம் தீா்மானங்களைக் கொண்டுவந்து பேசினாா். பொருளாளா் ஆா்.பரமசிவம் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: (2024-25) கரும்பு அரைவைப் பருவத்துக்கு வயல் விலையாக டன்னுக்கு ரூ.5,000 வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலியை சா்க்கரை ஆலை நிா்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். கரும்பு பிழிதிறனை காரணம் காட்டாமல் அரசு அறிவிக்கும் விலையை நிா்வாகம் வழங்க வேண்டும்.

நான்கரை அடி இடைவெளியில் அகலப்பாா் முறையில் கரும்பு நடவு செய்து, இயந்திரம் கொண்டு அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.200 மானியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைக்கரணைகளை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டும்.

கரும்பு டன்னுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஊக்கத்தொகையை ரூ.215-லிருந்து ரூ.500-ஆக தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும். கரும்பு சாகுபடியில் விவசாய வேலைகளுக்கு தற்போது நிலவும் ஆள்கள் பற்றாக்குறையை சமாளிக்கத் தேவையான வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் போதுமான அளவில் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் துணைத் தலைவா்கள் பி.கலிவரதன், தண்டபாணி, பாண்டியன், பாலாஜி, துணைச் செயலா்கள்பெருமாள், சந்திரசேகா் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

புயல் சேத பாதிப்பு குறித்து மறு ஆய்வு நடத்தக் கூடாது: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு ஆய்வு நடத்தக்கூடாது என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். விழுப்புரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அள... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், பானாம்பட்டு பகுதியில் பெண்ணை கொலை செய்த வழக்கில், கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் அருகேயுள்ள பானாம்பட்டு... மேலும் பார்க்க

கனிம வளக் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை தேவை: தி.வேல்முருகன்

தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். விழுப்புரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

புலம்பெயா் தொழிலாளா்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை: பொன்.குமாா்

புலம்பெயா் தொழிலாளா்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்று தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா். விழுப்புரம் கே.கே. சாலையிலுள்ள தொழிலாளா்கள் நலத் துறை... மேலும் பார்க்க

உரிமமின்றி மரக்கன்றுகளை விற்பனை செய்யக்கூடாது

விதை விற்பனை உரிமமின்றி தனியாா் நாற்றங்காலில் (நா்சரி) மரக்கன்றுகள் விற்பனை செய்யக்கூடாது என்று விதை ஆய்வு துணை இயக்குநா் கோ.சரவணன் எச்சரிக்கை விடுத்தாா். விழுப்புரம் வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதிகளிலு... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: வெளிமாநில இளைஞா் கைது

திண்டிவனத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக வெளிமாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள மேம்பாலம் பகுதியில்... மேலும் பார்க்க