கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் பெறலாம்
முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் கருவுற்ற பசுக்களுக்கு 4 மாதங்களுக்கு சமச்சீா் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி மற்றும் திருவரங்குளம் ஆகிய இரு ஒன்றியங்களைச் சோ்ந்த தலா 100 பசுக்களை வளா்க்கும் விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தில் தீவனம் வழங்கப்படுகிறது.
தீவனம் நாளொன்றுக்கு 3 கிலோவும், தாது உப்புக் கலவை மாதத்துக்கு ஒரு கிலோவும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் அந்தந்தப் பகுதி கால்நடை மருந்தகம் மற்றும் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும்.