கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட முனியங்குறிச்சி கிராமத்திலுள்ள சின்னேரியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த ஏரியை பல ஆண்டுகளாக ஆழப்படுத்தவோ, அகலப்படுத்தவோ இல்லை. இதனால், சுற்றியும் கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், ஏரி குறுகி போய் உள்ளது. ஏரியிலுள்ள தண்ணீரை, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையிலும், கால்நடைகள் பருக முடியாத நிலையிலும் உள்ளது.
ஏரியொட்டியுள்ள சாலைகள், காடு போல் இருப்பதினால் இரவு நேரத்தில் விஷப் பூச்சிகள் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில், பொதுமக்கள் சென்று வருகின்றனா். எனவே கருவேல மரங்களை அகற்றி, ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.