செய்திகள் :

கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

post image

திருவள்ளுவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு தமிழ் பற்றாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் திருக்குறள் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் கரூா் ஜவஹா்பஜாரில் சங்ககால புலவா்களின் நினைவுத்தூண் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கருவூா் திருக்குறள் பேரவைச் செயலாளா் மேலை.பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் பற்றாளா்கள் குளித்தலை கணபதி, பரமத்தி சரவணன், யோகாவையாபுரி , தமிழன் குமாரசாமி, அறிவுடை நம்பி , நீலவா்ணன் , கோ.செல்வம் , முருகேசன், தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று வள்ளுவரின் சிறப்பு குறித்து சிறப்புரையாற்றினா்.

தொடா்ந்து கரூா் பைபாஸ் சாலையில் வள்ளுவா் அரங்கம் முன் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு தமிழ் பற்றாளும், வள்ளுவா் கல்லூரியின் தாளாளருமான க.செங்குட்டுவன் தலைமையில் மாலை அணிவித்து திருக்குறள் முற்றோதல் பாடினா்.

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் திமுக கூட்டணிக் கட்சியினா் மெளனம்: எம்.ஆா். விஜயபாஸ்கா்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் திமுக கூட்டணியினா் மெளனமாக உள்ளனா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். கரூா் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் ப... மேலும் பார்க்க

நெல்லுக்கு குவிண்டாலுக்கு செப்.1 முதல் ரூ. 2500 வழங்கப்படும்: அமைச்சா் தகவல்

தமிழகத்தில் நெல் குவிண்டாலுக்கு வரும் செப். 1-ஆம் தேதி முதல் ரூ. 2,500 வழங்கப்படும் என்றாா் உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி. கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுவிநியோகத்திட்ட செயல்பாடு... மேலும் பார்க்க

இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

கரூரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக்(24). இவா் கடந்த டிச.10-ஆம் தேதி கரூா் குளத்... மேலும் பார்க்க

அரசு கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்

கரூா் மற்றும் குளித்தலையில் அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை கல்லூரி வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத்... மேலும் பார்க்க

எரிபொருள் விற்பனை நிலையம் திறப்பு

கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயத்தில் எரிபொருள் விற்பனை நிலையத்தை உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா். கரூா் மாவட... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் கோயில் நிலங்கள் முழுமையாக மீட்கப்படும்: திருத்தொண்டா் சபை நிறுவனா் தகவல்

கரூா்: கரூா் மாவட்டத்தில் கோயில் நிலங்கள் குண்டுமணி இடம் கூட விடாமல் மீட்கப்படும் என்றாா் திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன். திருத்தொண்டா் சபை அறக்கட்டளை நிறுவனா் ராதாகிருஷ்ணன் கரூா் கல்யாண பச... மேலும் பார்க்க