அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
கரூரில் வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி விற்ற 2 போ் கைது
கரூரில் வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில், சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதாக மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வியாழக்கிழமை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ஈஸ்வரன் கோயில் மற்றும் கரூா் பேருந்து நிலையம் அருகே சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட கரூா் வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (50), கரூா் ராம்நகா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (48) ஆகிய 2 பேரையும் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.