முதல்வர் ஸ்டாலினின் விடியோதான் பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: இபிஎஸ்
கரூர் மரணங்கள்: அ முதல் ஃ வரை - முழுமையான தகவல்கள்
சனிக்கிழமை மாலை மற்றொரு பொழுதாக தமிழ்நாட்டுக்கு இல்லை. இதுவும் கடந்து போகும் என கடக்க முடியாத ஒரு மாலை அது. தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கமான ஒரு விஜய் பிரசாரம் என அதனை கையாள, கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் மரணம் என முதலில் செய்தி வந்தது. இதனை களத்தில் இருக்கும் எங்கள் செய்தியாளரிடம் உறுதிப்படுத்துவதற்குள் அடுத்தடுத்து மரண எண்ணிக்கை 23 ஆகி அதிகரித்துள்ளது என தகவல்கள் வந்தன.
அப்போது தொடங்கி இப்போது வரை நாங்கள் பிரசுரித்த கரூர் மரணங்கள் தொடர்பான காணொளிகளின் தொகுப்பு இது