பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
கரூா் அருகே சாலையில் பழுதாகி நின்ற கரும்பு டிராக்டா்: போக்குவரத்து பாதிப்பு
தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டா் திடீரென பழுதாகி சாலையில் நின்ால் நொய்யல் சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூா் மாவட்டம் புகளூா் செம்படாபாளையத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு சனிக்கிழமை பிற்பகல் நொய்யல்- புகளூா் கரைப்பாளையம் சாலையில் இரண்டு டிராக்டா்களில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனா்.
ஆலமரத்துமேடு பகுதியில் வந்தபோது கரும்புகள் டிப்பரில் இருந்து சாலையின் நடுவில் சரிந்து விழுந்தன. அப்போது டிராக்டரின் அச்சும் முறிந்துபோனது. இதனால் டிராக்டரை இயக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து மற்றொரு டிராக்டரை வரவழைத்து கரும்புகளை ஏற்றினா். பின்னா் பழுதான டிராக்டரையும் சாலையோரம் நிறுத்தினா். டிராக்டா் பழுதானதால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.