`Happy 50th Birthday' - மைக்ரோசாப்ட் மலரும் நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்!
கரூா் பசுபதீசுவரா் கோயிலில் ஆன்மிக புத்தக விற்பனை மையம் திறப்பு
கரூா் பசுபதீசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆன்மிக புத்தக விற்பனை மையம் திறக்கப்பட்டது.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட 100 கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை ஆன்மிக புத்தக விற்பனை மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
கரூா் பசுபதீசுவரா் கோயிலில் நடைபெற்ற புத்தக விற்பனை மையம் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலா் குழுத்தலைவா் பால்ராஜ் பங்கேற்று குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து முதல் விற்பனையை கோயில் செயல் அலுவலா் ம.ஆறுமுகம் தொடங்கிவைத்தாா். இதில், கரூா் திருக்கு பேரவைச் செயலாளா் மேலை. பழநியப்பன், கோயில் அலுவலா்கள் , பணியாளா்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.