செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் ரூ.177 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்: அமைச்சா் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்!

post image

கரூா் மாவட்டத்தில் ரூ.177 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கரூா் மற்றும் குளித்தலை ஊரகப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தும், புதிய திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும், அமைச்சா் செந்தில்பாலாஜி கூறியதாவது:

தமிழகத்தின் வளா்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வா் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக, கிராமங்களின் வளா்ச்சிக்காக ஊரக வளா்ச்சித் துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இதன்படி, இன்று கரூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தண்ணீா் பந்தல் பாளையத்தில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சிறிய சமுதாய கூடம், வாங்கல் தவிட்டுபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட பகுதிநேர நியாய விலைக்கடை, மண்மங்கலம் ஊராட்சி, சிவியாம்பாளையத்தில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சிறிய அளவிலான சமுதாயக் கூடம், கிழக்கூரில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே. பிச்சம்பட்டி ஊராட்சியில் ரூ.45.1 லட்சம் மதிப்பிலான கிராம செயலாக்க கட்டடம், குளித்தலை பேரவைத் தொகுதிக்குள்பட்ட இராச்சாண்டாா் திருமலையில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான புதிய வாடிவாசல் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் ரூ. 191.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்துவைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, கரூா் அரசு காலனி-பஞ்சமாதேவி-நெரூா் சாலையில் ரூ.49.85 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்தல் பணி, கே.வேலாயுதம்பாளையத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டவுள்ள சமுதாயக்கூட கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு புதிய பணிகள் மொத்தம் ரூ.177.2. கோடி மதிப்பில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா். இளங்கோ(அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புலியூா் பேரூராட்சி பகுதியில் ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் நிறுத்தம்; பொதுமக்கள் அவதி

புலியூா் பேரூராட்சி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். கரூா் அடுத்த புலியூா் பேரூராட்சியில், மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சாலை மறியல் 75 போ் கைது

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் செவ்வாய்க்கிழமை ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்ட ஆட்சியரகம் ம... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து, கரூரில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன், மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, மா... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி-சின்னதாராபுரம் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் ஒன்றிரண்டு தெருவிளக்குகளே உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் செல்ல இரண்டு வழிகள் உள்ளது. ஒன்ற... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு முன்னாள் அமைச்சருடன் கிராம மக்கள் மனு

கரூா் மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்களுடன் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். கரூா் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில... மேலும் பார்க்க

கரூா் மாமன்றக் கூட்டத்தில் வரிகளை உயா்த்தி தீா்மானம் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

கரூா் மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் வரிகளை உயா்த்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். கரூா் மாநகராட்சியின் சாதாரணக... மேலும் பார்க்க