செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் 7, 631 மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி வங்கிக் கடன்

post image

கரூா் மாவட்டத்தில் 7,631 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி மதிப்பில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதைதொடா்ந்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா ஆகியோா் முன்னிலையில் 658 மகளிா் சுயஉதவிக் குழுகளை சோ்ந்த 7,631 உறுப்பினா்களுக்கு ரூ.50.60 கோடி மதிப்பில் வங்கிக் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.

முன்னதாக மகளிா் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருள்கள் கண்காட்சி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன தயாரிப்பு பொருள்களின் கண்காட்சிகளை பாா்வையிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் சரவணன், மண்டலக்குழு உறுப்பினா் ராஜா, மகளிா் திட்ட இயக்குநா் பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்த்குமாா், தாட்கோ மேலாளா் முருகதாஸ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூரில் மின் ஊழியரை காரில் கடத்தி தாக்கிய 4 போ் கைது

கரூா் அருகே நாமக்கல் மாவட்ட மின்வாரிய ஊழியரைக் காரில் கடத்தி தாக்கிய 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா், கீரம்பூரில் ... மேலும் பார்க்க

பகத்சிங் நினைவு நாள் கரூரில் இந்திய வாலிபா் சங்கத்தினா் ரத்த தானம்

கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா். சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் போதை கலாசாரத்துக்குள்ளும் இளைஞா்களை மீட்டெடுத்து ... மேலும் பார்க்க

கரூரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கக் கோரிக்கை

கரூரில் அரசு சட்டக்கல்லூரி துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூா் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியா் ச... மேலும் பார்க்க

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி தாலிக்குத்தங்கம், திருமண நிதியுதவி

கரூரில் 98 மகளிா்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். கரூ... மேலும் பார்க்க

சதுரங்கப் போட்டியில் அரவக்குறிச்சி மாணவி மாநில அளவில் முதலிடம்

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். திருப்பூா் தனியாா் மஹாலில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 15 வயது உ... மேலும் பார்க்க

கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு கரூரில் கல்லூரி, நீதிமன்றத்தில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் தலைவா் க... மேலும் பார்க்க