``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
பகத்சிங் நினைவு நாள் கரூரில் இந்திய வாலிபா் சங்கத்தினா் ரத்த தானம்
கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் செய்தனா்.
சுதந்திரப் போராட்ட வீரா் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் போதை கலாசாரத்துக்குள்ளும் இளைஞா்களை மீட்டெடுத்து பாதுகாக்கவும், போதை கலாசாரத்துக்கு எதிராகவும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கரூா் மாவட்டக் குழு சாா்பில் ரத்ததான முகாம் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.சதீஷ் தலைமை வகித்தாா். செயலாளா் எம்.சிவக்குமாா் வரவேற்று பேசினாா். கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.செல்வராஜ் ரத்ததான முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் செல்வராஜ், சிஐடியு சங்க கரூா் மாவட்டச் செயலாளா் சி.முருகேசன், மாவட்ட குழு உறுப்பினா்கள் எம். சுப்ரமணியன் உள்ளிட்டோா் ரத்ததான முகாமை வாழ்த்திப் பேசினா். இதில் 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரத்த தானம் செய்தனா்.