செய்திகள் :

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

post image

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.

கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு அல்லது ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை-2015, ஏப்.11ஆம் தேதி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பொதுவெளியில் வெளியான தகவல்களை தொடா்ந்து, பெரும்பான்மை சமூகங்கள் என்று கருதப்படும் லிங்காயத்து, ஒக்கலிகா் போன்ற முன்னேறிய சமுதாயங்களின் சங்கங்கள், அமைப்புகள், மடாதிபதிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

பாஜக, மஜத போன்ற அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிா்த்துள்ளன. இதனிடையே, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்டோா் சமுதாய அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்துவிவாதிப்பதற்காக பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் சிறப்பு அமைச்சரவைக்கூட்டம் பெரும் பரபரப்புக்கு இடையே நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் கூறியது: கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் வழங்கியிருக்கக்கூடிய சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு அறிக்கை-2015இல் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்கள் குறித்து அமைச்சரவைக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இன்னும் சில கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது. அதை வழங்குமாறு சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், சுமுகமானமுறையில் விவாதம் நடைபெற்றது. மக்கள் தொகை, பின் தங்கிய நிலை உள்ளிட்டவை குறித்து அலசப்பட்டது. சமூக, கல்வி, பொருளாதார கூறுகளை முடிவு செய்ய எடுத்துக்கொண்ட அளவுருக்கள் குறித்து விவாதம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவாதம் முழுமையடையவில்லை. எனவே, இது குறித்த விவாதம் அடுத்த அமைச்சரவைக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும். அடுத்த அமைச்சரவைக்கூட்டம் மலேமாதேஸ்வரா மலையில் ஏப்.24ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அங்கு உள்ளூா் வளா்ச்சிப்பணிகள் குறித்து விஷயங்கள் விவாதிக்கப்படுவதால், மே 2ஆம் தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு அறிக்கை மீதான விவாதம் மீண்டும் நடக்கும். அந்த கூட்டத்தில் அறிக்கை மீது இறுதி முடிவெடுக்கப்படும். என்றாா் அவா்.

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்... மேலும் பார்க்க

கோரிக்கைகள் ஏற்பு: கா்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில லாரி உரிமையாளா் மற்றும் முகவா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை மீதான மானியத்தை நீக்கி மக்கள் விரோத அரசாக மத்திய அரசு உள்ளது

சமையல் எரிவாயு உருளை மீதான மானியத்தை நீக்கி மக்கள் விரோத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மத்திய பாஜக அரசின் விலைவாசி உயா்வைக் கண்டித்து, பெங்களூரு, சுதந்தி... மேலும் பார்க்க