செய்திகள் :

கர்நாடகா: 'அலைச்சல் இல்லை; வரிசையில் நிற்க வேண்டாம்' - கவனம் பெறும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம்!

post image

அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கும் விதமாக இலவச வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகளைத் தொடங்கவிருக்கிறது கர்நாடகா சுகாதாரத் துறை.

Ambulance

முதன்முறையாக சி.வி. ராமன் நகர் பொது மருத்துவமனையில் இருந்து தொடங்கப்படுகிறது இந்தத் திட்டம். முதற்கட்டமாக புற்றுநோய் நோயாளிகள், முதியவர்கள், மூளை ரத்தக்கசிவு மற்றும் இதய பிரச்னைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பவர்களுக்கு இந்த வகையில் சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது.

இதுபோன்ற தீவிர பிரச்னைகளால் அவதிப்படும் எளிய மக்கள் மருத்துவ வசதிகளை அணுகுவது சவாலானதாக இருக்கும் என்பதை உணர்ந்து, OPD சேவைகளை வீட்டிலேயே வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

Minister for Health and Family Welfare, Shri Dinesh Gundu Rao
Minister for Health and Family Welfare, Shri Dinesh Gundu Rao

இதனால் கடுமையான நோயுடன் பல கிலோமீட்டர்கள் பயணிக்கவோ, வரிசையில் நிற்கவோ தேவையில்லை. ஒரு மொபைல் மருத்துவமனை மாதிரியின் மூலம் மருத்துவர்கள் வீடுதேடி வந்து தொடர் பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்குவார்கள்.

முதல்படியாக சி.வி. ராமன் நகரைச் சுற்றிய 5 இடங்களில் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் இந்த இடங்கள் விரிவாக்கம் செய்யப்படும். என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த திட்டத்தை பெங்களூரு மூழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை இந்த புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக புகழப்படுகின்றனர்.

Israel - Iran: ``போர்நிறுத்ததை ஏற்றுக் கொள்கிறோம்; அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி, ஆனால்..'' - இஸ்ரேல்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏ... மேலும் பார்க்க

"மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாயம்; இந்தி கட்டாயமல்ல" - மகா. பாஜக அமைச்சர்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கையும் தமிழ்நாட்டில் பெரும் விவாதப்பொருளாகியிருந்தது. கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்... மேலும் பார்க்க

Israel - Iran: ``மீண்டும் தெளிவாக சொல்கிறோம்..'' - போர்நிறுத்தம் குறித்து பேசிய ஈரான்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோ... மேலும் பார்க்க

Israel - Iran: போர்நிறுத்தை அறிவித்த ட்ரம்ப்; 12 நாள்களைக் கடந்தும் தொடரும் தாக்குதல்கள்..

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளுக்கு இடையேயிலான மோ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிகாரி.. என்ன காரணம்?

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் நேற்று மாலை சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவ... மேலும் பார்க்க

மேற்குவங்க இடைத்தேர்தல் TMC வெற்றிக் கொண்டாட்டத்தில் சிறுமி உயிரிழிப்பு; மம்தா பானர்ஜி வருத்தம்

மேற்கு வங்காளம் - காளிகஞ்ச், கேரளா - நிலம்பூர், குஜராத் - விசாவதர், குஜராத் - கடி, பஞ்சாப் - லூதியானா மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று (ஜூன் 23) வெளியாகின. பஞ்சாப்... மேலும் பார்க்க