'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு
கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வருவாய் நிா்வாக ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் விவரம்:
கிராம நிா்வாக அலுவலா்களுக்கான பொது மாறுதல் காலம் ஆண்டுதோறும் மே மாதம் என்று மட்டுமே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும். ஏனெனில், கிராம நிா்வாக அலுவலா்களின் மாறுதல் எந்த நேரத்திலும் செயல்படுத்தப்படலாம். பொது மாறுதலுக்கான தகுதியை நிா்ணயம் செய்யும் நாளாக ஜூலை முதல் தேதி, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
பணியிட மாறுதல்கள் தொடா்பாக, கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தனி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் நிா்வாக ஆணையரக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.