செய்திகள் :

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து; மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர் - என்ன நடந்தது?

post image

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைக்  குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலை அடுத்து  பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர்
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர்

இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது.

தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் மே 10 ஆம் தேதி மாலை இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரபூர்வ பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தனர்.

இரண்டு பெண் அதிகாரிகள் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்திருந்ததை பலரும் பாராட்டிருந்தனர்.

இதனிடையே கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, நமது சகோதரிகளின் குங்குமத்தை அளித்தவர்களை அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக அமைச்சர் குன்வார் விஜய் ஷா கூறியிருந்தார்.

கர்னல் சோபியா- குன்வார் விஜய் ஷா
கர்னல் சோபியா- குன்வார் விஜய் ஷா

கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைத்  தீவிரவாதிகளின் சகோதரி என சித்திரிக்கும் வகையில் அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ நான் பேசியதை சிலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். பஹல்காம் தாக்குதலால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நான் கூறியிருந்தால், 10 முறை மன்னிப்புக் கேட்க நான் தயாராக இருக்கிறேன்.

மதத்தைத் தாண்டி நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன். ராணுவத்தையும் சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

வக்ஃப் மசோதா: 'இடைக்கால நடவடிக்கையில் தவெக... ஆனால் திமுக?' - தவெக தலைவர் விஜய் காட்டம்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் திமுகவை விமர்சித்து தவெக தலைவர் விஜய் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, "ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: 'திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை' - திருமாவளவன்

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய செ... மேலும் பார்க்க

தேர்தலில் தோல்வியை தழுவிய ஜக்மீத் சிங்; கனடாவில் இனி காலிஸ்தான் கோரிக்கை என்னவாகும்? - ஓர் அலசல்!

"இந்த அறையில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. நீங்கள் செய்த அனைத்திற்கும் மிகவும் நன்றி. நியூ டெமாக்ராட்ஸிற்கு (New Democrats) இந்த இரவு ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். மிக நல்ல... மேலும் பார்க்க