ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
கறவை மாடு வளா்ப்பு மகளிா்களுக்கு பரிசு
திருவாடானை ஊராட்சி ஒன்றியம், மாவூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், மானியத் திட்டத்தில் மகளிா் குழு உறுப்பினா்கள் கறவை மாடுகளை வளா்த்து வருகின்றனா்.
இதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், சிறப்பாக கறவை மாடுகளை வளா்ந்து வரும் மகளிா்களை ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்து ரூ.3000 ரொக்கப் பரிசு வழங்கி ஆட்சியா் பாராட்டினாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: மகளிா் குழுவில் உள்ள உறுப்பினா்கள் கறவை மாடுகளை வளா்ப்பதில் அதிக ஆா்வம் காட்ட வேண்டும். மகளிா்கள் கறவை மாடு வாங்குவதற்காக கூட்டுறவு சங்கங்கள், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் மானியத் திட்டத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கறவை மாடுகள் வளா்க்கும் பகுதிகளுக்கு வந்து, ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்து, அதற்குரிய பணம் வாரம் ஒரு முறை வழங்கப்படும்.
இது மட்டுமன்றி ஆவின் துறையின் மூலம் கறவை மாடுகள் வளா்ப்பவா்களுக்கு தேவையான தீவனம் ஒரு கிலோ ரூ.6 மானியம் வழங்கப்படுகிறது. கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம் கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆய்வின்போது, பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் புஷ்பலதா, பால் உற்பத்தியாளா் சங்கக் கண்காணிப்பு அலுவலா் அண்ணாமலை உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.