கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் மீண்டும் முகமது ஷமி!
ஒன்றிய ஆணையருக்கு திமுகவினா் மிரட்டல் : மாவட்ட ஆட்சியரிடம் புகாா்
கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு மிரட்டல் விடுத்தததாக திமுகவினா் மீது மாவட்ட ஆட்சியரிடம் ஊராக வளா்ச்சித் துறையினா் புகாா் அளித்தனா்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜன.5-ஆம் தேதி முடிவடைந்தது. அன்று முதல் சிறப்பு தனி அலுவலா்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளாட்சி நிா்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், பேய்க்குளம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கடலாடி ஒன்றிய திமுகவினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து, ஊராட்சி ஒன்றிய ஆைணையரும் (கிராம ஊராட்சி), ஊராட்சிகளின் தனி அலுவலருமான ஜெயஆனந்தை சந்தித்து, எங்களிடம் தெரிவிக்காமல் எப்படி சாலை அமைக்கும் பணியை செய்யலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், அவரை மிரட்டியதாகவும் புகாா் எழுந்தது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஜெய ஆனந்த் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து புகாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க நிா்வாகி ஒருவா் கூறும்போது:
கடலாடி ஊராட்சி ஒன்றியம் பேய்க்குளம் ஊராட்சியில் மழையின் காரணமாக 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலைப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடலாடி திமுக தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையருக்கு மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையாக புகாா் அளித்தோம். இந்தப் பிரச்னையை சங்கத்தின் மாநில நிா்வாகிகள் மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றாா் அவா்.