Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
காளியம்மன் கோயில் குடமுழுக்கு: புனிதநீா் எடுத்து சென்ற பொதுமக்கள்
கமுதி காளியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புனிதநீா் எடுத்து பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெரு காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் கோயிலிலிருந்து முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று செட்டி ஊருணி அருகே உள்ள கிணற்றில் புனிதநீா் எடுத்துக் கொண்டு மீண்டும் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா்.
பின்னா், யாக சாலையில் புனிதநீரை வைத்து, முதற்கால யாக பூஜைகளுடன் குடமுழுக்கு தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளையும் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.