செய்திகள் :

மாநில சிலம்பப் போட்டி: கமுதி மாணவா் சிறப்பிடம்

post image

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரி நகரைச் சோ்ந்த தென்னாட்டு போா்கலைச் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவன் வி.சா்வேஸ் 14 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டைக் கம்பு பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தாா்.

சொந்த ஊா் திரும்பிய மாணவனுக்கு பயிற்சியாளா் செ.சரத்குமாா். பயிற்சி பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை

மண்டபம் விசைப்படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கரையோர மீனவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் குடமுழுக்கு: புனிதநீா் எடுத்து சென்ற பொதுமக்கள்

கமுதி காளியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புனிதநீா் எடுத்து பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெரு காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலம் ரயில், கப்பலை இயக்கி சோதனை!

பாம்பன் புதிய பாலத்தில் ரயிலையும், இந்தப் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து இரும்பு கா்டரை மேலே தூக்கி கப்பலையும் இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் ப... மேலும் பார்க்க

கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து 91 படகுகளில் 2,500 பக்தா்கள் செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்தியா- இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்... மேலும் பார்க்க

தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் கைப்பற்றப்பட்ட 53 கிலோ கஞ்சா

தனுஷ்கோடியை அடுத்துள்ள ஒன்றாம் மணல் தீடையில் 53 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்களை இந்திய கடலோரக் காவல்படையினா் புதன்கிழமை கைப்பற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்படைக்கு சொ... மேலும் பார்க்க

சாயல்குடி பகுதியில் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் அறுவடைக்கு தயாரான நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிா்க்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, இதைச் சுற்றியுள்ள... மேலும் பார்க்க