டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் 85 போ் கைது
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணி மனை முன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினா் 85 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கம், ஓய்வு பெற்றோா் சங்கம் சாா்பாக 15-ஆவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புகா் பணிமனை முன் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய சங்கத் தலைவா் எஸ்.ஆா்.ராஜன், முன்னாள் மத்திய சங்கத் தலைவா் எஸ்.பி.கேசவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட நிா்வாகிகள் எம்.அய்யாதுரை, வி.பாஸ்கரன், மாவட்டச் செயலா் எம்.சிவாஜி உள்ளிட்ட 85 பேரை போலீஸாா் கைது செய்தனா்.