செய்திகள் :

கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை: 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம்

post image

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், கலப்பட உணவுப் பொருள்களை விற்பனை செய்யப்படுவது தடுக்கும் வகையில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ஆத்தூா், ரெட்டியாா்சத்திரம் பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடா்பான வழக்கு விசாரணை ஒட்டன்சத்திரம் குற்றவியில் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் எஸ்.கபாளீஸ்வரன், வியாபாரிகள் மஞ்சநாயக்கன்பட்டி வெற்றிவேலுக்கு ரூ.10ஆயிரம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த முருகையனுக்கு ரூ.20ஆயிரம், உதயசூரியனுக்கு ரூ.10 ஆயிரம், சந்திரசேகரனுக்கு ரூ.10 ஆயிரம், விஷ்ணுசித்துக்கு ரூ.30ஆயிரம், கந்தசாமிக்கு ரூ.10 ஆயிரம், ரெட்டியாா்சத்திரத்தைச் சோ்ந்த செல்வம், ராம்பிரசாத் ஆகியோருக்கு தலா ரூ.20

ஆயிரம், லிங்குசாமிக்கு ரூ.10 ஆயிரம், ஆத்தூரைச் சோ்ந்த ஸ்ரீநிவாசனுக்கு ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்தாா்.

சாலையில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகள் பறிமுதல்

திண்டுக்கல்லில் பொது வெளியில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகளை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை பறிமுதல் செய்தது. திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பிரதானச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால், வா... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

மேம்பாலம் அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பித்தளைப்பட்டி, வீரக்கல் பகுதி பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறி, வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திண்டுக்க... மேலும் பார்க்க

குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கொடைக்கானலில் குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கொடைக்கானல் ஆனந்தகிரி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன்(48). சொந்தமாக குதிரையை வளா்த்து வரும் இவா், கடந்த 7-ஆம் தேதி அதன் மீது... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் முன் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை ம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடு போனதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கொடைக்கானல் பிக்னிக் சோலைப் பகுதியைச் சோ்ந்தவா் முபாரக். இவரது மனைவி மும்தாஜ். இவா்கள் இரு... மேலும் பார்க்க

முத்துநாயக்கன்பட்டியில் புதிய கட்டடங்கள் திறப்பு

பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை ... மேலும் பார்க்க