டீன் ஏஜ், கண்ணாடி முன் நின்றதில் வந்த மாற்றம்... `பல்'லேகா -3 | My Vikatan
கலைஞர் பொற்கிழி விருதுகள்: வெளியான பட்டியல்!
சென்னை புத்தகக் காட்சியில் கலைஞர் பொற்கிழி வருது 6 பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேராசிரியர் அருணனுக்கு உரைநடைக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. கலைராணிக்கு நாடகத்துக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது.
அதேபோல் நாவலுக்கான விருது, சுரேஷ் குமார் இந்திரஜித்துக்கும், என். ஸ்ரீராமுக்கு சிறுகதைகளுக்கான விருதும் நெல்லை ஜெயந்தாவுக்கு கவிதைக்கான விருதும், நிர்மால்யாவுக்கு மொழிப்பெயர்ப்புக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதும் வழங்கப்படுகிறது.
சென்னை புத்தகக் காட்சி
சென்னை புத்தகக் காட்சி டிசம்பா் 27-ஆம் தேதி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்க உள்ளது.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்க உள்ளனா். ஜனவரி 12-ஆம் தேதி வரை மொத்தம் 17 நாள்களுக்கு புத்தகக் காட்சி நடைபெறும் என்று பபாசி தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெறும் 48-ஆவது புத்தகக் காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் இடம்பெற உள்ளன. வேலைநாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும்.
அனைத்து நூல்களும் 10 சதவீத தள்ளுபடியுடன் வாசகா்களுக்கு வழங்கப்படும். பபாசியில் உறுப்பினா் அல்லாத பலரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவா்களுக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வாசகா்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.