செய்திகள் :

கலைஞர் வீடு அருகே சல்வார் ஷோரூம் திறந்த முதல்வரின் சகோதரி; கலந்துகொண்ட பிரபலங்கள்

post image

மறைந்த முரசொலி செல்வத்தின் மனைவியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான செல்வி சென்னை கோபாலபுரத்தில் புதிதாக சல்வார் மற்றும் சேலைகளுக்கான பிரத்யேக ஷோரூம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி செல்வம். ஆரம்பத்தில் பெங்களுருவில் முரசொலி செல்வம் சன் தொலைக்காட்சியின் உதயா சேனலை கவனித்து வந்தபோது கணவருடன் அங்கேயே இருந்தார்.

பிறகு வயோதிகம் காரணமாக செல்வம் சென்னை திரும்பிய பிறகு இவர்கள் கோபாலபுரத்திலேயே தங்கி விட்டனர்.

இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முரசொலி செல்வம் மறைந்தார்.

செல்வி ஷோ திறப்பு விழாவில்

இதனையைடுத்து கோபாலபுரத்தில் தங்கியிருந்தபடி தன் தாயாரை அருகிலிருந்து கவனித்து வந்த செல்வி, அங்கேயே அதாவது கலைஞரின் வீடு அமைந்திருக்கும் அதே பகுதியிலேயே பெண்களுக்கான சல்வார் மற்றும் திருமணப் பட்டுகள் உள்ளிட்ட ஆடைகளுக்கான பிரத்யேக ஷோ ரூம் ஒன்றைத் திறந்துள்ளார்.

ஷோ ரூம் திறப்பு விழாவில் திவ்யா சத்யராஜ்

கடந்த வெள்ளிக் கிழமை நடந்த இந்த ஷோரூமின் திறப்பு விழாவில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், திவ்யா சத்யராஜ் உள்ளிட்ட செல்வியின் நெருங்கிய நட்பு வட்டத்தினர் கலந்து கொண்டனர்.

``டிடிவி தினகரனைச் சந்தித்து ஆலோசித்தேன்" - அண்ணாமலை சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. எனவே, தமிழ்நாட்டின் அரசியல் களம் பரபரக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு கட்டமாகவே கூட்டணிப் பேச்சுவார்த்தை விவகாரங்கள் பொதுவெளிக்கு வ... மேலும் பார்க்க

"அமித்ஷாவின் வீடுதான் தற்போது அதிமுக தலைமை அலுவலகம்" - கனிமொழி எம்.பி கிண்டல்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அம... மேலும் பார்க்க

காசா : உலக நாடுகளின் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான குரல் - உண்மையான அக்கறையா?

'காசா' இப்போது சர்வதேச அளவில் உச்சரிக்கப்படும் சொல். அக்டோபர் 7, 2022 அன்று தொடங்கிய போர் ஏறத்தாழ மூன்றாண்டை நெருங்கிவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்... மேலும் பார்க்க

பற்றி எரியும் H-1B விசா விவகாரம்: அமெரிக்க வெளியுறவு செயலரைச் சந்தித்த ஜெய்சங்கர்; என்ன பேசினர்?

நேற்று அமெரிக்கா நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார்.இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்த பிறகு, இதுவே இவர்கள... மேலும் பார்க்க

`MGR -க்கு பிறகு STALIN தான்' - DMK அரசியலுக்குப் பின்னால்? | MODI GST TVK Vijay | Imperfect Show

* இனி மக்களின் சேமிப்புகள் அதிகரிக்கும் - பிரதமர் மோடி * ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் * பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் கேள்வி! * திமுக கூட்டத்த... மேலும் பார்க்க

திருவாரூர்: ``திமுக-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்ல...” - அமைச்சர் கே.என்.நேரு ஆவேசம்!

தி.மு.க சார்பில், திருவாரூர் தெற்கு வீதியில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம், தமிழகத்தை தலைக்குனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் நேற்று நடைபெற்றது. கடந்த 20ம் தேதி அதே இடத்தில் த.வெ.க தலைவ... மேலும் பார்க்க