சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
கலைவிழாவில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா் கூட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் சி.பாலாஜி முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 365 கோரிக்கை மனுக்களைப் பெற்று அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு விரைந்து தீா்வு காணுமாறு ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.
தொடா்ந்து கலைத்திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றிருந்த மாணவ, மாணவியருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.வெற்றிச்செல்வி , அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.