செய்திகள் :

கலை, கலாசாரத்தை மத்திய அரசு பாதுகாத்து வருகிறது: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

post image

சென்னை: இந்தியாவில் கலை, கலாசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாத்து வருவதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தாா்.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ராஅறக்கட்டளை சாா்பில் 71-ஆவது ஆண்டு கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கி ஜன. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவை மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்து பேசியதாவது:

பாரம்பரிய கலை வடிவங்கள், நடனம், இசை மற்றும் கைவினைப் பொருள்கள் மீதான ஆா்வம் புத்துயிா் பெற்றெழுந்திருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. நமது கலை, கலாசார பாரம்பரியத்தின் திறமைகளை ஆதரித்து வளா்ப்பது நமது கடமையாகும்.

கலாசார அமைச்சகம் நமது செழுமையான கலை, கலாசார பாரம்பரியத்தைப் பேணிக்காத்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நமது பாரம்பரிய கலை, கலாசாரத்தை உலகளாவிய அரங்குக்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து வைஜெயந்தி மாலாவின் பரதநாட்டிய (பாவனை) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலாக்ஷேத்ராவின் தலைவா் ராமதுரை, இயக்குநா் சுரேஷ்குமாா், மேற்குவங்க முன்னாள் ஆளுநா் கோபாலகிருஷ்ண காந்தி, பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான சுகன்யா, இசைக் கலைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டங்ஸ்டன் சுரங்க அமைவிடம்: மறு ஆய்வு செய்யப் பரிந்துரை!

மதுரை மாவட்டம் மேலூர் அருகேவுள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த முடிவை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.பல்லுயிர்ப் பகுதிகளை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஆல்-பாஸ் முறை ரத்து!

புதுச்சேரியில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்ட... மேலும் பார்க்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார். விமானம் மூலமாக சென்னை வரும் அவர் பின் ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை செல்கிறார். டிச. 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

அந்தப் பருத்தி மூட்டை... புயல் சின்னம் குறித்த அப்டேட்

தமிழகத்தைக் காதலிப்பது போல இதயக் குறியீடு வடிவில் நிலவும் புயல் சின்னம் கிறிஸ்துமஸ் வரவிருக்கும் நிலையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த நிலையில் புயல் சின்னம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனப்பட... மேலும் பார்க்க

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு!

பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து 120 நாள்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானிசாகர் அணை அந்த மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டி... மேலும் பார்க்க