இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
கல்குவாரி நீரில் முழ்கி இளைஞா் உயிரிழப்பு
சிவகாசி அருகே புதன்கிழமை கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பிரதீப்குமாா் (25). இவா் புதன்கிழமை திருத்தங்கல்-செங்கமலப்பட்டி சாலையில் உள்ள கல்குவாரியில் குளிக்கச் சென்றாா். அப்போது, நீச்சல் தெரியாததால் இவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.