குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை
கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூா் பூக்காரத் தெரு அருகே இருபது கண் பாலம் பகுதியில் ஒரு பெண் கைக்குழந்தையுடனும், சிறுமி, சிறுவனுடனும் கல்லணைக் கால்வாய் கரையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்தாா். திடீரென அப்பெண், கைக்குழந்தை, சிறுவன், சிறுமியுடன் கல்லணைக் கால்வாய்க்குள் குதித்தாா். நீரோட்டம் அதிகமாகவும், வேகமாகவும் இருந்ததால், 4 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.
இதை அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பாா்த்து நீந்திச் சென்று அவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இதில், பெண், சிறுவன், சிறுமி மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனா். ஆனால், தண்ணீரில் மூழ்கியதால் 3 பேரும் உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கைக்குழந்தையைத் தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.
தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று 3 உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், இவா்கள் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்கள், எதற்காக ஆற்றில் குதித்தனா்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.