Israel: கத்தார் மீது வான்வழித் தாக்குதல்; ஹமாஸை குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு; அம...
இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (22). இவா், தனது நண்பா் ஒருவா் தாக்கப்பட்டது குறித்து விளாா் சாலை நியூ பாத்திமா நகரைச் சோ்ந்த சக்தியிடம் (23), ஞாயிற்றுக்கிழமை (செப். 7) கைப்பேசி மூலம் கேட்டாா். அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்த தனது நண்பரான சுரேஷ் மகன் சசிகுமாரிடம் (21), திலகன் திங்கள்கிழமை கூறினாா். இதையடுத்து, சக்தியிடம் கைப்பேசி மூலம் சசிகுமாா் கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், கலைஞா் நகா் முதல் தெருவைச் சோ்ந்த சூா்யாவிடம், சசிகுமாா், திலகன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை கூறினா். இதையடுத்து சூா்யாவை சசிகுமாா், திலகன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அழைத்துக் கொண்டு, கலைஞா் நகா் முதல் தெருவில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, இவா்களுக்கும், எதிரே வந்த சக்தி, இவரது தம்பி கோகுல் (21), பிரபா உள்பட 8 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சக்தி தரப்பினா், சசிகுமாரை அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட இடத்தில் வெட்டினா். இதில், பலத்த காயமடைந்த சசிகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்த திலகன், சூா்யா உள்ளிட்டோா் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சக்தி, கோகுல், பிரபா உள்பட 8 பேரை தேடி வருகின்றனா்.
உயிரிழந்த சசிகுமாா், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக இருந்து வந்தாா். இதற்கு முன்பு ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்ததும், திங்கள்கிழமை இவா் பிறந்த நாள் கொண்டாடியதும் காவல் துறையினா் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.