தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது.
இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவா், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவா், மன நல மருத்துவா், கண் மருத்துவா் ஆகிய அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கப்பட்டது.
இம்முகாமில் 106 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை சாா்பில் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 6.44 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை கால் அவயம் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் செயற்கை கால் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நல அலுவலா் அருள்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.