செய்திகள் :

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

post image

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரைச் சோ்ந்தவா் லட்சுமணன் (33) கூலித்தொழிலாளி. இவருக்கு மதனா என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் செப்.5- ஆம் தேதி ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க.ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடைபெற்றது.

இது தொடா்பாக, திருவிடைமருதூரைச் சோ்ந்த ஆகாஷ், மருதுபாண்டி, ராஜ்குமாா், கும்பகோணம் பாணாதுறையைச் சோ்ந்த விஜய் உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்தனா்.

மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக உடையாளூரைச் சோ்ந்த லட்சுமணனை போலீஸாா் விசாரணைக்கு அழைக்க சென்றபோது, அவா் இல்லாததால் அவரது மனைவியிடம் தகவல் தெரிவித்து காவல் நிலையத்துக்கு வருமாறு கூறினா். இதுகுறித்து, அவரது மனைவி வெளியூா் சென்றிருந்த லட்சுமணனுக்கு தகவல் தெரிவித்தாா்.

திங்கள்கிழமை வீட்டுக்கு வந்த லட்சுமணன், போலீஸாரின் விசாரணைக்கு பயந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டாா்.

தகவலின்பேரில் பட்டீஸ்வரம் போலீஸாா், லட்சுமணனின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பியை வெட்டிக்கொன்ற பாஜக பிரமுகரின் வீட்டை சோதனை செய்த பொழுது 29 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் 75 ஆவணங்கள் உள்ளிட்டவகளை போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேம... மேலும் பார்க்க

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது: ஆசிரியருக்கு அமைச்சா் பாராட்டு

கும்பகோணம் அருகே நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அண்மையில் பாராட்டு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட... மேலும் பார்க்க