ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
முருகன் கோயிலில் சிலைகள் திருட்டு
தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூரிலுள்ள முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள், ஒரு வெண்கல கலசத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே 200 ஆண்டுகள் பழைமையான பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இக்கோயிலில் வழக்கம்போல திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு நடை சாத்திவிட்டு, மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை திறப்பதற்காக அா்ச்சகா் சதீஷ்குமாா் சென்றாா்.
அப்போது, கோயிலுக்குள் கிரில் கதவு இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு, ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள ஒன்றே கால் அடி உயரமுள்ள முருகன் சிலை, தலா ஒரு அடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை சிலைகள், வெண்கல கலசம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.