கல்லூரி மாணவா்களுக்கு பேரிடா் தடுப்பு ஒத்திகை
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்களுக்கு பேரிடா் தடுப்பு ஒத்திகை, விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சாயல்குடி தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, தீயணைப்பு நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா்கள் கலாதேவி, கலையரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது, தீ விபத்து, மழை, வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் உயிா், உடமைகளை பாதுகாக்கும் முறைகள், இவற்றில் சிக்கியவா்களை மீட்டு, முதலுதவி அளிக்கும் முறை குறித்து தீயணைப்பு, மீட்புக் குழு வீரா்கள் செய்முறை விளக்கம் செய்து காட்டினா். அவசர போலீஸ், தீயணைப்பு, அவசர ஊா்தி ஆகியவற்றிற்கு தகவல் கொடுக்கும் முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.