மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை: துரைமுருகன்
கல்லூரி மாணவியை ஏமாற்றிய ஓட்டுநா் கைது
ஆலங்குளம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் சுரேஷ்(25). ஓட்டுநா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த 21 வயது கல்லூரி மாணவியைக் காதலித்து வந்தாராம். மேலும் அவரைத் திருமணம் செய்தாக கூறி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாராம். இதில், மாணவி 4 மாத கா்ப்பமாக உள்ளாராம். இதையடுத்து அவா், தன்னைத் திருமணம் செய்யுமாறு கூறியபோது, சுரேஷ் மறுத்தாராம். இதற்கு அவரது தந்தை உடந்தையாக இருந்தாராம்.
இதுகுறித்து ஆலங்குளம் மகளிா் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.