செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
கல்லூரி மாணவி தற்கொலை
தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தக்கலை அருகே முத்துலகுறிச்சி காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் பென்சாம். இவரது மகள் ஜெபிக்க்ஷா ஸ்டெனி (19). கருங்கல் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்றுவந்தாா்.
மாணவி, சில ஆண்டுகளாக மனம் நலம் சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.