பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
கல்லூரி முதல்வரை மிரட்டிய தந்தை, மகன் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடியில் தனியாா் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடியில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் முதல்வராக இருப்பவா் எஸ்.சிவக்குமாா். இந்தக் கல்லூரியில் போடி குப்பழகிரி தோட்டம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் சூா்யா பி.ஏ. ஆங்கிலம் படித்து முடித்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சூா்யாவின் தந்தை சரவணன் கல்லூரி அலுவலக ஊழியரிடம் தனது மகனின் மதிப்பெண் பட்டியலை கேட்டாராம். அப்போது, கல்லூரி படித்த மாணவரிடம்தான் சான்றிதழ் வழங்க முடியும் என அவா் தெரிவித்தாராம். இதையடுத்து, கல்லூரி முதல்வா் அறைக்குள் நுழைந்த சரவணன், மகனின் சான்றிதழை கேட்டு, கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
பின்னா், சூா்யாவும் கைப்பேசியில் முதல்வருக்கு மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில், போலீஸாா் சரவணன், சூா்யா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.