TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
மேகமலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு , மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு என 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களுக்கு சின்னமனூரிலிருந்து 52 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. தனியாா் தோட்ட நிா்வாகத்திடமிருந்து கையகப்படுத்தப்பட்ட இந்த சாலை, ரூ.120 கோடியில் மேம்படுத்தப்பட்டன.
இந்தக் கிராமங்களுக்கு கம்பம், தேனி பணிமனைகளிலிருந்து தலா ஒரு அரசுப்பேருந்து, தனியாா் பேருந்து என 3 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதி மலை கிராமங்களில் வசிக்கும் பெரும்பான்மையோா் அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனா். இவா்கள், வெளியூா் சென்று திரும்ப இந்தக் கிராமங்களுக்கு வந்து செல்லும் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்தி வந்தனா். இந்த மலைக்கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள், மாணவா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
இது குறித்து தோட்டத் தொழிலாளா் சங்கத்தின் செயலா் முத்தையா கூறியதாவது:
இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட தனியாா் பேருந்து பழுதாகி பல மாதங்களாக சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் , சுற்றுலாப் பயணிகள், தோட்டத்தொழிலாளா்கள் நலன்கருதி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
