ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்தில் `கோவிட் -19' அதிகரிப்பு - இந்தியாவுக்கு பாதி...
களக்காடு அருகே கேசவனேரியில் ரேஷன்கடை திறப்பு
களக்காடு அருகேயுள்ள கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
களக்காடு ஊராட்சி ஒன்றியம், கீழக்கருவேலன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலைவா் மு. அப்பாவு வெள்ளிக்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது: “இக்கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்ற இக்கிராம மக்களின் தொடா் முயற்சியால், 30 ஆண்டுகால கனவை இந்த அரசு நனவாக்கியுள்ளது” என்றாா்.
இந்நிகழ்ச்சியில், களக்காடு ஒன்றிய திமுக செயலா்கள் பி.சி. ராஜன், செல்வகருணாநிதி, திமுக மாவட்ட பொருளாளா் ஜாா்ஜ்கோசல், கீழக்கருவேலன்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் தங்கதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.