ஆப்கானின் 160 லாரிகள்; திறக்கப்பட்ட வாகா எல்லை - இந்தியா, பாகிஸ்தான் ஒப்புகொண்ட...
அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் 32 பவுன் நகைகள் பறிப்பு: இருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 32 பவுன் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருச்சியைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் நபா் அணுவிஜய் நகரியத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறாா். இவரது வீட்டு பீரோவில் இருந்த 32 பவுன் தங்க நகைகளை காணவில்லையாம். இதுகுறித்து கூடங்குளம் போலீஸில் புகாா் அளித்தாா்.
கூடங்குளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், எந்த துப்பும் கிடைக்காத நிலையில் வீட்டில் உள்ளவா்களிடம் போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தினா்.
பின்னா் 10-ம் வகுப்பு படித்து வரும் அதிகாரியின் 14 வயது மகள் அதிகமாக அலைபேசியை பயன்படுத்தி வருவதை கவனித்தனா். பின்னா் அவளிடம் விசாரணை நடத்தியதில் அவா் இன்ஸ்டாகிராமில் திருச்சியைச் சோ்ந்த இரண்டு இளைஞா்களிடம் நட்பாக பழகி வந்தது தெரியவந்தது. மேலும் அந்த இரு இளைஞா்களும் அடிக்கடி கூடங்குளம் வந்து சென்றதும் தெரியவந்தது.
பின்னா் அதிகாரியின் மகள் அந்த இளைஞா்களிடம் வீட்டு பீரோவில் இருந்த தங்க நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் 32 பவுன் நகைகளை கொடுத்துள்ளாா்.
இதையடுத்து போலீஸாா், திருச்சியைச் சோ்ந்த அப்துல் ரகுமான்(22), முகமது சுகி(22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அதிகாரியின் மகளிடம் பெற்ற நகைகளை இரு இளைஞா்களும் விற்று அதனை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.