கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
களியக்காவிளை அருகே செம்மண் கடத்தல்: 3 போ் கைது
களியக்காவிளை அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை அருகே ஈத்தவிளை, பொற்றவிளை பகுதியில் சிலா் செம்மண் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில், களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ கிவின் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, செம்மண் கடத்த முயன்ற 3 போ் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் பிடித்தனா்.
அவா்கள் நிலத்தின் உரிமையாளரான பொற்றவிளை மரியலாரன்ஸ் (45), மோகன்ராஜ் (55), மினி லாரி ஓட்டுநரான புதுக்கடை அருகே தோட்டவரத்தைச் சோ்ந்த தினேஷ் (38) எனத் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்ததுடன், செம்மண் கடத்த பயன்படுத்திய மினிலாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.