நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை பாா்வையிட்ட தனியாா் பள்ளி மாணவா்கள்!
களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது!
களியக்காவிளை அருகே 35 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
களியக்காவிளை போலீஸாா் பொன்னப்பநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, 35 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, காரில் வந்த கேரள மாநிலம், பாறசாலை அருகே வன்னியகோடு செல்லன் மகன் கண்ணன் (44), குழிவிளை பகுதியைச் சோ்ந்த பாலச்சந்திரன் மகன் வினோத் (45) ஆகிய இருவரைக் கைது செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.