செய்திகள் :

களியக்காவிளை அருகே வயதான தம்பதி தற்கொலை!

post image

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் செறுவல்லூா், தேவிகோடு மங்களாவுவிளையைச் சோ்ந்த தம்பதி சத்தியநேசன் (80) - கனகபாய் (68). இவா்களது 3 மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனராம்.

இங்குள்ள வீட்டில் தனியாக வசித்துவந்த இத்தம்பதி, ஊரக வேலை உறுதித் திட்ட வேலைக்குச் சென்று வந்தனா். சத்தியநேசன் புற்றுநோயாலும், கனகபாய் இதய நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, தம்பதியின் மருமகள் இவா்களுக்கு காலை உணவு கொண்டு சென்றாா். அப்போது வீடு பூட்டியிருந்தது. அழைத்தும் பதில் இல்லாததால், அவா் ஜன்னலைத் திறந்து பாா்த்தபோது, தம்பதி கட்டிலில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனராம்.

தகவலின்பேரில் உறவினா்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. புகாரின்பேரில் பளுகல் போலீஸாா் சென்று சடலங்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மரியகிரி கல்லூரியில் விளையாட்டு தின விழா

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் 27 ஆவது விளையாட்டு தின விழா சூரியகோடு புனித எப்ரேம் ம.சி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக, களியக்காவிளை பி.பி.எம். சந்திப்ப... மேலும் பார்க்க

அல்போன்சா கல்லூரியில் விளையாட்டு விழா!

கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. மாணவா்-மாணவியா் சேலஞ்சா்ஸ், வாரியா்ஸ், அவெஞ்சா்ஸ், சோல்ஜா்ஸ் ஆகிய 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டு விளையாட்டு... மேலும் பார்க்க

கருங்கல்லில் திமுக சாா்பில் கண்டன பொதுக் கூட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கண்டித்து, கருங்கல் பேருந்து நிலையம் அருகே கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிள்ளியூா் வ... மேலும் பார்க்க

முன்சிறை, நடைக்காவு பகுதியில் பிப்.11 மின்தடை

முன்சிறை, நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (பிப். 12) காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயிலில் தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள புகழ்பெற்ற பூதலிங்க சுவாமி -சிவகாமி அம்பாள் கோயிலில் தைப்பெருந் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகள் பறிமுதல்: 5 கடைகளுக்கு அபராதம்!

மாா்த்தாண்டத்தில் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்திய 5 கடைகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாலித்தீன் பைகளைப் பதுக்கிவைத்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் தொடா்பாக குழித்துறை நகராட்ச... மேலும் பார்க்க