செய்திகள் :

கள்ளக்குறிச்சி குடியரசு தினவிழா: ஆட்சியா் கொடியேற்றினாா்!

post image

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

இதையடுத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து, காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 28 காவலா்களுக்கு முதல்வா் பதக்கங்களை வழங்கினாா். பின்னா், தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, நில அளவைத் துறை, ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 377 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சான்றிதழ்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த வழங்கினாா்.

தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி, மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டிராக்டா் மீது பைக் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை டிராக்டா் மீது பைக் மோதியதில் பிளஸ் 2 மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். திருக்கோவிலூா் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் முருகன் மகன் மோகன்ராஜ் (17).... மேலும் பார்க்க

பைக் பெட்டியில் வைத்திருந்த ரூ. 2.80 லட்சம் திருட்டு

கள்ளக்குறிச்சி அருகே மதுக் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் பெட்டியிருந்து ரூ.2.80 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், எஸ்.புதூா் கிராமத்... மேலும் பார்க்க

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் சுகவீனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ஜி.ஆரியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 6 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள் அளிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை வழங்கினாா். கூட்டத்துக்கு, ஆட... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கான சுயதொழில் முனைவோா் கருத்தரங்கு, குறைதீா் கூட்டம் பிப்.13-ஆம் தேதி நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: பெண்ணிடம் நகை பறிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் 3 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைக் குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி அம்பி... மேலும் பார்க்க