கள்ளிக்குடி முதல்வா் மருந்தகம் திறப்பு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுதும் முதல்வா் மருந்தகங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.
கள்ளிக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தக திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துணைப் பதிவாளா் ஜே. பிரபா முத்துப்பேட்டை ஒன்றிய திமுக செயலா் இரா. மனோகரன், கள்ளிக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் அ. செந்தில்நாதன், பாசனதாரா் சங்கத் தலைவா் ஜி. பாலசுப்பிரமணியன் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜி.கே காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலா் வி. கமலராஜன் வரவேற்றாா்.