சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்: மாநகராட்சி அறிவிப்பு!
கழிவுநீர் குழியில் விழுந்து குழந்தை பலி: "ஜல்லிக்கட்டுக்குக் காட்டும் ஆர்வத்தை.." -கொதிக்கும் மக்கள்
கழிவுநீர் குழியில் விழுந்து 4 வயது குழந்தை இறந்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்குக் காரணமான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நெரிஞ்சிபட்டி கிராமத்தில் வசிக்கும் கட்டடத் தொழிலாளியான சந்தன கருப்பு-கிருஷ்ணவேணி தம்பதிக்கு 4 வயதில், கேசவன் 3 வயதில் ரோஷன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
இவர்கள் வீட்டின் அருகே சமீபத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் குழியை மூடாமல் இருந்துள்ளனர். கழிவு நீர் தேங்கிப் பாதுகாப்பில்லாமல் இருந்த குழி அருகே நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தைகள் இருவரும் குழிக்குள் விழுந்துள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோரும், அக்கம்பக்கமிருந்தவர்களும் குழந்தைகளை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் குழந்தை கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை ரோஷனை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆண்டிபட்டி பகுதிக்கு வந்த அரசு அதிகாரிகள் ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல் கழிவுநீர் கால்வாய் குழியை மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பேசும் ஊர்க்காரர்கள், "கழிவுநீர் கால்வாயை ஊர்மக்களே தோண்டியதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். ஊராட்சி நிர்வாகத்திற்குத் தெரியாமல் எப்படிக் கழிவு நீர் கால்வாயைத் தோண்ட முடியும்?ஒரு குழந்தை இறந்து மற்றொரு குழந்தை தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில் வட்டார அதிகாரிகள் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வந்து கழிவு நீர் குழியை மூடிவிட்டுச் சென்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்கத்தில் அலங்காநல்லூரில் கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் வாராவாரம் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அமைச்சர், கலெக்டர், சோழவந்தான் எம்.எல்.ஏ யாரும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கவோ, ஆறுதல் சொல்லவோ வரவில்லை" என்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks