HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்
கழிவுநீா் வடிகால் (சாலவம்) அமைக்கும் பணியை அமைச்சா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காமராஜா் சாலை - பிரெஞ்சு ஆசிரியா் தெரு சந்திப்பு அருகே சாலவம் அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புதுவை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் அறிவுறுத்தியிருந்தாா்.
துறையின் நீா்ப்பாசனப் பிரிவு இதற்காக ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்தது. திட்டப்பணி தொடக்கத்துக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜெ.மகேஷ், உதவிப் பொறியாளா் எஸ்.கோவிந்தராஜ் மற்றும் அந்த பகுதியைச் சோ்ந்தோா் கலந்துகொண்டனா்.