செய்திகள் :

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் ருதுராஜ் கெய்க்வாட்!

post image

இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட இருக்கிறார்.

இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் என்றழைக்கப்படும் ஒருநாள் கோப்பைத் தொடரில் யார்க்‌ஷியர் அணியில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கும், ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிர அணிக்கும் கேப்டனாக விளையாடும் 28 வயதான ருதுராஜ் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் இந்த சீசன் முடியும்வரை விளையாடுவர் என யார்க்‌ஷியர் அணி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்குச் சென்ற ருதுராஜ், இந்தியா ஏ அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால், அவருக்கு அங்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

ஒரு சீசனில் நன்றாக விளையாடியவர்களுக்கு எல்லாம் இந்திய அணியில் இடம் கிடைக்கும்போது பல சீசன்களாக நன்றாக விளையாடிவரும் ருதுராஜ் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்.

இங்கு விளையாடுவது குறித்து ருதுராஜ், “இங்கிலாந்தில் கிரிக்கெட் அனுபவத்தைப் பெறுவது எனது குறிக்கோளில் ஒன்றாகவே இருக்கிறது. இங்கிலாந்தில் யார்க்‌ஷியரை விட பெரிய கிளப் எதுவுமில்லை” எனக் கூறியுள்ளார்.

ஜோ ரூட்டை அதிகமுறை வீழ்த்திய பும்ரா!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டினை டெஸ்ட் போட்டிகளில் பும்ரா அதிகமுறை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லீட்ஸில் நடைபெற்றுவரும் மு... மேலும் பார்க்க

வாசிம் அக்ரமை முந்தி வரலாறு படைத்த பும்ரா!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா வாசிம் அக்ரமை முந்தி வரலாறு படைத்துள்ளார். இங்கிலாந்துடனான முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 2-ஆம் நாள் ... மேலும் பார்க்க

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்தார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிய... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் நேற்று (ஜூன் ... மேலும் பார்க்க

குறுகிய இடைவெளியில் 4 விக்கெட்டுகள்; இந்திய அணி 600 ரன்கள் குவிக்குமா?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் தி... மேலும் பார்க்க

சதம் விளாசிய ரிஷப் பந்த்; டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் குவிப்பு!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் நேற்று (ஜூன் ... மேலும் பார்க்க