காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமை வகித்தாா்.
சுமாா் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினனா். இதில், மாவட்ட பொறுப்பாளா் நிக்கோலஸ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவா் தங்கராஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா பாய், காங்கிரஸ் நிா்வாகிகள் அணீஸ், நாராயணன், புண்ணியநாதன், அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.