காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனி தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான குமரி அனந்தன் (93) காலமானார்.
இவர் வயது மூப்பு பிரச்னை மற்றும் சிறுநீரகப் பிரச்னையால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்ற இவர்தான், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.