Guru Mithreshiva: `உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?' | Ananda Vikatan | குரு...
காசநோய் ஒழிப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு
எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்புப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
‘காசநோய் இல்லா நாமக்கல்-2025’ என்ற திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. காசநோய் கண்டறியும் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, அதிநவீன நடமாடும் எண்ம எக்ஸ்ரே வாகனம் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகளுக்கு அரசு வழங்கி வரும் உதவியுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் ஊட்டச்சத்து மாவு, உணவுப் பொருள்களை இலவசமாக வழங்கி வருகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட நடமாடும் இலவச எண்ம எக்ஸ்ரே வாகனம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதை அவா் பாா்வையிட்டாா்.
அதைத் தொடா்ந்து, திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து பொருள்களின் இருப்பு, தினசரி வருகை தரும் நோயாளிகள் விவரம், சிகிச்சை பெற்று வரும் கா்ப்பிணிகள் விவரம், பரிசோதனைகள் விவரம் குறித்து கேட்டறிந்து, தாய்மாா்களுடன் கலந்துரையாடினாா்.
முன்னதாக, கொன்னையாா் பகுதியில் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் தரம், காலாவதி தேதி, துணி பை பயன்பாடு, பொருள்களின் விலை விவரம் உள்ளிட்டவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
படம் தி.கோடு மாா்ச்13 கலெக்டா்
எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுசெய்த நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா.